வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (13/01/2019)

`புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!' - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,  தலைமைச் செயலாளர் உள்ளிட்ட  அரசுத் துறைகளின் செயலர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் 4 மணி நேரம் நீடித்தது.

பிளாஸ்டிக்

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற மார்ச் 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தபடும் பாலீத்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் தட்டுகள், பிளாஸ்டிக் தாள்கள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் தடை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவை

அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களுக்குச் சொந்தமாக இயங்கும் மதுபானக் கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க