வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (13/01/2019)

கடல் சீற்றத்தால் உடைந்த படகுகள்! - குமரி மீனவர்கள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதம் அடைந்தன. 15-க்கும் மேற்பட்ட படகுகள் மாயமானதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

படகுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கடல் அலை வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை கடலலை இழுத்துச் சென்றன. பள்ளம் கடற்கரை கிராமத்தில் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான நாட்டு படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. கடல் சீற்றம் குறித்து தகவல் தேவாலய ஒலிபெருக்கி மூலம்  அறிவிக்கப்பட்டது.

கடல் சீற்றம்

இதையடுத்து மீனவர்கள் படகுகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனாலும் 15 க்கும் மேற்பட்ட படகுகள் மாயமாகியுள்ளன. கடல் சீற்றம் காரணமாக 6 க்கும் மேற்பட்ட படகுகள் உடைந்து நாசமாயின. உடைந்த படகுகளின் பாகங்களை மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்தனர்.

 

உடைந்த படகுகள்

மேலும், கடலில் காணாமல் போன படகுகளை  தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.