வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:11:30 (14/01/2019)

`உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் மட்டும்தான் பங்குபெறும்!’ - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்

உலகத் தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டும்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு பெறுவார்கள் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருக்கிறார்.

எம்.சி சம்பத்.

கடலூரில் தமிழக அரசுப் போக்குவரத்துத்துறை சார்பில் சென்னை, சேலம், திருச்சி ஆகிய வழித்தடங்களுக்குச் செல்லும் 12 புதிய பேருந்துகளைத் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``உலக முதலீட்டார்கள் மாநாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு உலக முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. தற்போது 2019-ம் ஆண்டில் இரண்டாவது முதலீட்டார்கள் மாநாடு வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் தொழில் நிறுவனங்கள் பற்றி அனைத்தும் சரி பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் வங்கிக் கணக்கு, உலக அளவு தொழில் நிறுவனங்கள் உள்ளதா, அனைத்தும் தரம் வாய்ந்த நிறுவனங்களா என ஆய்வு
செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் பல நல்ல தொழில் நிறுவனங்கள் வருவார்கள், உலகத் தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டும்தான் மாநாட்டில் பங்கு பெறுவார்கள் அவர்கள் முதலீடு செய்து தமிழக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு வரும் மார்ச் மாதம் முதல்வர் பங்குத் தொகையை அறிவிப்பார். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,750 வழங்குவது உறுத்திபடுத்தப்படும்’ என்றார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது.