வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (14/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (14/01/2019)

உறியடித்தலில் கலக்கிய பெண் காவலர்கள்! - அம்பத்தூர் சரகத்தில் நடந்த பொங்கல் விழா

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேர் போட்டியில் பெண் காவலர்கள்

அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி வட்டத்துக்கு உட்பட்ட  பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு மற்றும் மகளிர் என 18 காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பெண் காவலர்கள் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் வைத்த பெண் காவலர்கள்

நிகழ்ச்சியில்,  காவல் நிலையங்களில் வேலைசெய்யும் காவலர்களுக்கு,  தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.  கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல் எனப் பல்வேறு விளையாட்டு போட்டிகள்  நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு, துணை ஆணையர் ஈஸ்வரன் பரிசுகளை வழங்கினார்.

உறியடிப்போட்டியில் பெண் காவலர்கள்

 இணை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன் அய்யனார் மற்றும் உதவி ஆணையர்கள் செம்பேடு பாபு, ரமேஷ்,ஜெயராமன் மற்றும்  இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

" விழா காலங்களில், தனது குடும்பத்தை மறந்து பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபடும் போலீஸாருக்கு, இதுபோன்ற  சூழலில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில்  பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று உணர்ச்சிபொங்க தெரிவித்தனர்.