வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (14/01/2019)

கடைசி தொடர்பு:19:10 (14/01/2019)

தொடர் விடுமுறை எதிரொலி - குமரி விவேகானந்தர் பாறை படகு சேவை நேரம் அதிகரிப்பு!

பொங்கல் விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் செல்ல படகு சேவை 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

kaniyakumari

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், கடலுக்கு நடுமே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரத்தில் கம்பீரமான திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சிகள் என கண்ணுக்கு இனிமையான காட்சிகள் ஏராளம் உள்ளன.

kaniyakumari

கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல பூம்புகார் நிறுவனம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் படகு சேவை நடக்கும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்றுவருவார்கள். இந்த நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

kaniyakumari

இதையடுத்து, ஜன 15-ம் தேதி (நாளை) மற்றும் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில், 3 நாள்களுக்கு 3 மணி நேரம் கூடுதலாக விவேகானந்தர் பாறைக்கு படகு இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த மூன்று நாள்களும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை படகுகள் இயக்கப்படுகின்றன.