'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' - தருமபுரியில் நடக்கும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி! | mutual fund muthaliittu manthirangal awareness programme will be held at Dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (14/01/2019)

'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' - தருமபுரியில் நடக்கும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி!

நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்ற முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, வரும் 20.01.2019-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை, தருமபுரியில், ஹோட்டல் அதியமான் பேலஸில் நடைபெறுகிறது.

வங்கிகள் மட்டுமே முதலீட்டுக்கான வழியென்று நம்பிவந்த மக்களிடையே, தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகுறித்த சிந்தனை பெருகிவருகிறது. பங்குச்சந்தை முதலீட்டில் நேரடியாக ஈடுபடத் தயங்குபவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுசெய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டியவை எவை, எத்தனை வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான காலத்தை எப்படித் தீர்மானிப்பது, எந்தெந்த தேவைக்குரியவர்களுக்கு, வயதுக்குரியவர்களுக்கு எந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்பது போன்ற முதலீட்டு மந்திரங்களை இவர்கள் அறிவதில்லை. 

முதலீட்டு மந்திரம்

எனவே, மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக, நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்ற முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, வரும் 20.01.2019-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை, தருமபுரியில், ஹோட்டல் அதியமான் பேலஸில் நடைபெறுகிறது. முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.