சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி - சயன், மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு? | kodanad estate video issue - sayan, manoj got bail

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:04:00 (15/01/2019)

சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி - சயன், மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு?

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

எடப்பாடி - மேத்யூ

கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். அவர்கள் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்தினர்.

கொடநாடு 

அப்போது போலீஸிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். போலீஸார் கோரிக்கை படி இருவரையும் சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி சரிதா, ``சயன், மனோஜ் பேட்டியால் எங்குக் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது. சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா" எனக் கேள்வி எழுப்பியதுடன், ``வழக்குப்பதிவு மீதான சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே சயான், மனோஜை காவலில்அனுப்ப முடியும்'' எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கொடநாடு 

தொடர்ந்து நள்ளிரவு சைதாப்பேட்டையில் நீதிபதி சரிதா வீட்டில் இருவரும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கறிஞருடன் இருவரும் வரும் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சயன், மனோஜ் இருவரையும் போலீஸார் விடுவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க