தமிழக அரசின் கல்விப்பயணம் -அறிவியல் ஆர்வத்தால் சிதம்பரம் பள்ளி மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு | Cuddalore School Girl selected for educational tour trip

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (15/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (15/01/2019)

தமிழக அரசின் கல்விப்பயணம் -அறிவியல் ஆர்வத்தால் சிதம்பரம் பள்ளி மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி ப்ளஸ்-டூ மாணவி ஸ்ரீபூஜா மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம்  மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிதம்பரம்

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் அறிவிப்பினை  செயல்படுத்தும் பொருட்டு அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய நான்கு துறைகளில் தனித்து விளங்கும் மாணாக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக  முதல் கட்டமாக தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜா தயாரித்த ``பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீ விபத்தை தடுக்கும் முறைகள்” என்ற தலைப்பிலான அறிவியல் காட்சிப்பொருள், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சவிபத்தைத்ேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தென்னிந்திய அளவில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும், தேசிய அளவில் புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் பூஜா பங்கேற்றார்.

பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய மேலைநாடுகளுக்கு அறிவியல் கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக அளவிலான 50 பேர் கொண்ட குழுவில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின்  பேரில் மாணவி பூஜா இடம் பெற்றுள்ளார். வருகிற 20 -ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் இக்குழுவினர்  வரும் 30 -ம் தேதி வரை பின்லாந்து, பின்லாந்து பல்கலைக்கழகம், ஸ்வீடன் நாட்டில் கப்பல் பயணம், தேசிய அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்,  ஸ்வீடன் வாசா அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த இடங்களில் கல்விச் சுற்றுலா மேற்கொள்கின்றனர். 

மேலைநாடுகளுக்குக் கல்வி சுற்றுலா செல்லவிருக்கும் மாணவி பூஜாவுக்கு கடலூர் மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் பழனிச்சாமி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவி பூஜாவை பள்ளி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.