சபரிமலை சென்று வீடு திரும்பிய பெண் -மாமியார் மருமகள் இடையே நடந்த மோதல் | Women went to sabarimala was attacked

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (15/01/2019)

சபரிமலை சென்று வீடு திரும்பிய பெண் -மாமியார் மருமகள் இடையே நடந்த மோதல்

சபரிமலை சென்ற கனகதுர்க்கா இன்று கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை மாமியார் தாக்கி மண்டையை உடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகதுர்க்கா - பிந்து

சபரிமலையில் கடந்த ஜனவரி 2 -ம் தேதி அதிகாலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனகதுர்க்கா மற்றும் கண்ணூரைச் பிந்து ஆகியோர் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். சபரிமலை தரிசனத்திற்குப் பிறகு அவர்களுக்கு மிரட்டல் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் இருவரும் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் பணியில் இருக்கும் கனக துர்க்காவிற்கு இன்றுடன் விடுமுறை முடிகிறது. எனவே அவர் இன்று காலை பெரிந்தல்மண்ணயில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளார்.

கனகதுர்க்கா

வீட்டிற்குள் சென்ற ககனதுர்க்காவிற்கும் அவரது மாமியாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் மாறிமாறித் தாக்கியதாக கூறப்படுகிறது. கம்பால் தாக்கியதில் கனகதுர்க்காவின் மண்டை உடைந்துள்ளது. உடனே பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள் கனகதுர்காவை மீட்டு ஆட்டோவில் பெரிந்தல்மண்ண தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகதுர்க்காவை தாக்கிய மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனகதுர்காவின் மாமியாரும் தன்னை கனகதுர்கா தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு  சேர்ந்துள்ளார்.

பத்மபூஷன்

இதுகுறித்து கனகதுர்க்காவின் சகோதரர் பரத்பூஷன் கூறுகையில், "இன்று வீட்டிற்கு வந்த கனகதுர்க்காவை மாமியார் தடுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர்" என்றார். கனகதுர்க்கா கூறுகையில், "நான் வீட்டிற்கு செல்லும்போது முன்வாசல் திறந்து கிடந்தது. வாசல்வழியாக ஹாலுக்கு சென்றபோது சமையல் அறையில் நின்ற மாமியார் யார் என கேட்டபடி வந்தார். என்னைபார்த்ததும் கம்பால் அடிக்கத்தொடங்கினார். நான் தடுக்கவில்லை. பின்னர் என்னை வெளியேதள்ளி கதவை சாத்தினார். நான் திருப்பி தாக்கவில்லை" என்றார். சபரிமலை சென்ற பெண் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.