முதல்வரின் மேல் தேவையில்லாமல் பழிசுமத்துகிறார்கள் -அமைச்சர்  தங்கமணி ! | Minister Thanagamani refused the charges against CM Edappadi Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (15/01/2019)

கடைசி தொடர்பு:18:22 (15/01/2019)

முதல்வரின் மேல் தேவையில்லாமல் பழிசுமத்துகிறார்கள் -அமைச்சர்  தங்கமணி !

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஊரக புழக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் தமிழக  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமூக நலம்-சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ரூ.12.80 லட்சம் மதிப்பில் கோழிக்குஞ்சுகளை வழங்கினர்.

முதல்வரின் மேல் தேவையில்லாமல் பழிசுமத்துகிறார்கள் -அமைச்சர்  தங்கமணி !

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் தமிழக  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமூக நலம்-சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ரூ.12.80 லட்சம் மதிப்பில் கோழிக்குஞ்சுகளை வழங்கினர்.

அமைச்சர்  தங்கமணி

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பலரும் கலந்து கொண்டனர்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக மாவட்ட அளவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் கோழிகள் வழங்கப்பட்டுவிட்டது.
 
சேலம் மாவட்டம் கூட்டுரோடு பகுதியில் ரூ.950 கோடி மதிப்பீட்டில் தெற்காசிய அளவில் சிறந்த, ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா,1300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. அதில் கோழி-மீன்-பன்றி மற்றும் பல்வேறு கால்நடைகளின் உற்பத்தியும், விற்பனை அவுட்லெட் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தமாத இறுதியில் சின்னசேலம் கூட்ரோட்டில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைக்க தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருக்கிறார். தமிழகத்தில் கோமாரி நோய் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே அந்த நோய் இருந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கோமாரி நோய் தடுக்கப்பட்டுவிட்டது. கால்நடை மருத்துவர் பணியிடங்கள் 900 காலியாக இருந்தன. தற்போது 800 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன" என்றார்.

அடுத்து  பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, "வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள பெண்களுக்குத் தலா 50 கோழிக்குஞ்சுகள் வீதம் ரூ.6,400 மதிப்புள்ள கோழிக் குஞ்சுகள், கூண்டு உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 66 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு  ஒன்றரை லட்சம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்" என்றார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று அமைச்சர் தங்கமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். பொங்கல் பரிசு வழங்கும் திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நேரத்தில்,அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சதித்திட்டம் தீட்டி அவர் மீது இப்போது இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள்.

அமைச்சர்  தங்கமணி

 

மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள, பொங்கல் பரிசு திட்டத்தின் மீதும் முதல்வர் மீதும்  இந்த அரசின் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க-வினரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிரட்டி, பத்திரங்கள் வாங்கிக் கொண்டது போலவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீதும் கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதையே நாங்களும் கோரிக்கையாக வைக்கிறோம். முதல்வர் மீதும் தமிழக அரசு மீதும் திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தி சதித்திட்டம் தீட்டியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசுக்கும்  முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்றக் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.  அவர்களுக்கு எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலில்  மக்கள் உரிய பதிலளிப்பார்கள்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்