`அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்னைகள் இல்லாமல் சிறப்பாக முடிந்தது' - மாவட்ட ஆட்சியர்! | There is no problem in avaniyapuram jallikattu says district collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (15/01/2019)

`அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்னைகள் இல்லாமல் சிறப்பாக முடிந்தது' - மாவட்ட ஆட்சியர்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம்

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக பிரபலமான ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. இந்தாண்டு பல்வேறு புகார் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று சந்தேகத்தில் இருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக பல்வேறு வழக்கு தொடரப்பட்டதால் நீதிமன்றமே ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி ராகவன் தலைமையில் ஜல்லிக்கட்டு கமிட்டி அமைத்து இன்று ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.  போட்டியினை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் கொடியசைத்து துவங்கிவைத்தார்.  காலை 8 மணிக்கு தொடங்கி 4மணி வரை நடைபெற்றது. இதில் 8சுற்றுகளாக 476காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

500 மாடு பிடி வீர்ர்களும் களத்தில் காளைகளை அடக்கினர். போட்டியில் சிறப்பாக 9 காளைகளை  மதுரை முத்துப்பட்டியை திருநாவுக்கரசு அடக்கினார், அதேபோல்  முடக்கத்தானை சேர்ந்த அறிவு அமுதன் 7 காளைகளையும்,  சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ராகவாபாண்டி 6 காளையும், காவனூரை சேர்ந்த அஜித்குமர்  சில காளையும் அடக்கினார். இவர்களுக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இதேபோல் சிறப்பாக விளையாடிய காளைகளான காஞ்சாரங்குளம் பாண்டியின் காளைக்கும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் காளைக்கும், மதுரை ராஜாகூர் எம்,பி,ஆம்புலன்ஸ் காளைக்கும் சிறந்த காளைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக மாவட்ட ஆட்சியர் நடராஜனும், முன்னாள் நீதிபதி ராகவன்  பேட்டியளித்தனர்.