`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்! | Actor kamal speaks about kodanadu case

வெளியிடப்பட்ட நேரம்: 06:05 (16/01/2019)

கடைசி தொடர்பு:06:05 (16/01/2019)

`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்!

கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார். தொடர்ந்து இன்றைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும்,  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திய லிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மற்றும் ஜே சிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்து பேசினர்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தற்போது வெளியாகியுள்ள கொடநாடு கொலை தொடர்பான ஆவணப் படம் ஒரு மர்ம கதையின் அடுத்த அத்தியாயமாக இருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மீது இது மாதிரியா கொலை குற்றச்சாட்டு இல்லை எனக் கூற முடியாது. 

கொடநாடு

ஆனால் அதேநேரம் இந்த குற்றச்சாட்டு நமக்குப் பெருமை கிடையாது. இந்தக் குற்றச்சாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள சந்தேகத்திற்கு ஆதாரமாக இருப்பதில் ஒன்றாக இருக்கக் கூடும் என நினைப்பதில் தவறில்லை என்றவர், முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ``நானும் இரண்டரை வருடமாக அத்தைதான் வலியுறுத்தி வருகிறேன். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமில்லை. எடப்பாடி மீதான குற்றச்சாட்டு உண்மை என்றால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க