வெற்றி வீரருக்கு ஆம்னி கார்... வீறுகொண்டு நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு | Madurai jallikatu started around 8am

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:24 (16/01/2019)

வெற்றி வீரருக்கு ஆம்னி கார்... வீறுகொண்டு நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது !

 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயலும் வீரர்கள்

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டில் 2-வது சுற்றில் 130க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டுவிட்டன. மதுரையில் நேற்று தை முதல் நாள் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது.  அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு 8 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

சீறிப்பாயும் காளை அடக்கும் வீரர்கள்

போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மாடுபிடி வீரர்களும், காளையின் உரிமையாளர்களும் அரசு விதிகளுக்குக் கட்டுப்படுவதாக உறுதி ஏற்றதற்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மொத்தம் 988 காளைகளும், 846 வீரர்களும் களத்தில் இறங்க பதிவு செய்துள்ளனர். இவர்கள் 75 நபர்கள் வீதம் பேட்ஸ் வாரியாக களம் இறக்கப்படுகிறார்கள்.

சீறி வந்த காளை வீறுகொண்டு பாய்ந்து அடக்கும் வீரர்

சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகள் கண்காணிக்கப்பட்டு போட்டி இறுதியில் சிறப்புப் பரிசுகளாக ஆம்னி கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து வெற்றி வீரர்களுக்கு தங்கக் காசு, வெள்ளிக் காசு, சைக்கிள், டி.வி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தற்போது 3-வது சுற்றில் 130க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டுவிட்டன. காயமடைந்த காளைகள் வீரர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன. தொடர்ந்து அடுத்த சுற்றுகளுக்குக் காளைகளும், வீரர்களும் தயாராகி வருகின்றனர்.