`போலி ரசீது; கூடுதல் கட்டணம்!- பிச்சாவரம் சுற்றுலாப் பயணிகள் குமுறல் | Extra Fare charged at pichavaram ; tourist complaints

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (16/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (16/01/2019)

`போலி ரசீது; கூடுதல் கட்டணம்!- பிச்சாவரம் சுற்றுலாப் பயணிகள் குமுறல்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

பிச்சாவரம்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே பிச்சாவரம் அமைந்துள்ளது. வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மாங்குரோவ் காடுகள், சதுப்பு நிலக் காடுகள் அமைந்துள்ளன. இந்தச் சதுப்பு நிலக் காடுகளின் எழில் கொஞ்சும் அழகை படகுகளில் சென்று ரசிக்கத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினம், தினம் அதிக அளவில் வருகின்றனர். இதனால் தமிழகத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக பிச்சாவரம் உள்ளது. இங்கு விடுமுறை தினங்களில் அதிகமாக வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிச்சாரவரத்தில் சுற்றுலாப் பயணிகள்

இது குறித்து கிள்ளை முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிள்ளை ரவிச்சந்திரன் கூறுகையில், புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ள பிச்சாவரத்தில் விடுமுறை தினங்களில் அதிக கூட்டம் வருகிறது. இந்த நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. பணியில் இருக்கும் அதிகாரிகள் பொய்யான ரசீது போட்டு கண்டன முறைகேடு நடக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போட் மேன்கள் தினக்கூலிகளாகத்தான் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இதுவரை நிரந்தரப்படுத்தவில்லை. இதனால் மேலாளர் யாரைப் பயணிகளை அழைத்துச் செல்ல முதலில் அனுப்புகிறாரோ அவர்தான் செல்ல வேண்டும். இதில் பெரிய அளவில் முறைகேடுகள் raviநடைபெறுகின்றன.

இது இல்லாமல் வனத்துறை தனியாகப் படகுகளை இயக்குகிறது. இதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கிறது. உணவகம், தங்கும் விடுதியைத் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்குச் சாதாரண நாளில்கூட தயிர்ச் சாதம்கூடக் கிடைப்பது இல்லை, விடுமுறை நாள்களில் கேட்க வேண்டாம். இதேபோல் பேரூராட்சி ஏலம் எடுத்த தொகையைத் தாண்டி பொய்யான ரசீது தயார் செய்து அதிக அளவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இப்படிப் பல வகைகளில் முறைகேடுகள் நடைபெறும் பிச்சாவரம் சுற்றுலா தளம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.