குழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி! - அசத்தும் எம்.எல்.ஏ | Madurai MLA PTR Palanivel thiyagarajan inaugurates new Anganwadi in his constituency

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (16/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (16/01/2019)

குழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி! - அசத்தும் எம்.எல்.ஏ

குழந்தைகளுக்குத் தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை என்கிற உளவியலாளர்களின் கருத்தை மனதில் கொண்டு, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரயில் வடிவில் அங்கன்வாடி மையத்தை தனது தொகுதியில் உருவாக்கி அதை திறந்து வைத்தார் மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்


மதுரை மத்தியத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவாகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தொகுதிப் பணிகளைத் திட்டமிட்டு செய்து வருகிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். புகார் பெட்டி மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் மனுக்களைப் பெற்று வரும் இவர், எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினாலும் அதைச் சரியான முறையில் செய்து வருவதாகத் தொகுதி மக்களால் பாராட்டப் பெறுகிறார். தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இன்று திறந்து வைத்தார். இந்த மையத்தை ரயில் வடிவ தோற்றத்தில் அமைத்துள்ளதை இப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். 

குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துகிற சூழல் இருந்தால்தான் அவர்களால் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதால், இந்த அங்கன்வாடி மையத்தை ஊட்டி மலை ரயில் போன்ற வெளிப்புறத் தோற்றத்துடன் அமைத்துள்ளார். இதன் நான்கு பக்கங்களிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். தன் தொகுதியிலுள்ள எளிய மக்கள் பயன் பெரும் வகையில் பல திட்டங்களை வைத்திருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சியில் இருக்கும்போதே முடிந்த வகையில் பணி செய்து வருவதே பெரும் சாதனை என்கிறார்கள் மக்கள். அங்கன்வாடி திறப்புவிழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மக்களின் குறைகளையும் கேட்டார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க