கம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…! | mattu pongal held grand manner in cumbam nantha kopalan temple

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (17/01/2019)

கடைசி தொடர்பு:00:30 (17/01/2019)

கம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…!

பிரசித்திபெற்ற கம்பம் நந்த கோபாலன் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளைக்கு படையலிட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர் .

மாட்டுப் பொங்கல்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேனி மாவட்ட மக்களுக்கும் மாட்டுப் பொங்கல் என்றால் சட்டென நினைவிற்கு வருவது கம்பம் நந்த கோபாலன் கோயிலும், அதன் பட்டத்துக் காளையும் தான். வருடா வருடம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் கோயிலின் பட்டத்துக்காளைக்கு அலங்காரம் செய்து படையலிட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் பட்டத்துக்காளையை வணங்கிச்சென்றனர்.

நந்த கோபாலன் கோவில்

தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உடல் ரீதியிலான பிரச்னை ஏற்படும் போது, அப்பிரச்னை சரியானால் தங்களது தொழுவில் பிறக்கும் கன்றை நந்த கோபாலன் கோயிலுக்கு நேந்துவிடுவதாக வேண்டிக்கொள்வர். அதே போல் அந்த மாட்டிற்கு உடல் பிரச்னை சரியானதும். அத்தொழுவத்தில் பிறக்கும் கன்றை நந்த கோபாலன் கோயிலில் விடுவர். மேலும், தை முதல் நாள் பிறக்கும் கன்றையும் நந்த கோபாலன் கோயிலில் உள்ள தொழுவில் விடுவர். இவ்வழக்கம் பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் பின்பற்றப்படுகிறது. இவ்வளவு சிறப்புவாய்ந்த நந்த கோபாலன் கோயிலில் இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயில் தொழுவில் இருந்த மாடுகளுக்குப் பொதுமக்கள் பழங்கள் கொடுத்து வணங்கிச்சென்றனர்.