`வாட்ஸ் அப் குரூப் ஆரம்பியுங்கள்' - காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்ட டி.ஜி.பி! | dgp order to all police station to starts whats app group

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:09:49 (17/01/2019)

`வாட்ஸ் அப் குரூப் ஆரம்பியுங்கள்' - காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்ட டி.ஜி.பி!

அனைத்துக் காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க வேண்டும் எனத் தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். 

வாட்ஸ் அப்

தமிழகக் காவல்துறையை நவீனப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. எப்.ஐ.ஆர் பதிவை ஆன்லைனில் மேற்கொள்வது, குற்றவாளிகளின் தகவல்களைச் சேகரித்து பேஸ் டிடெக்டர் ஆப், ஆன்லைனில் காவல்துறை சான்றிதழ், நற்சான்றிதழ் பெறுவது என இதுபோன்ற தொழில்நுட்ப விஷயங்கள் காவல்துறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் குற்றவாளிகளை விரைவாகப் பிடிக்கும் வகையில் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது போன்ற பணிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

டி.கே ராஜேந்திரன்

இதற்கிடையே, அனைத்துக் காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க வேண்டும் எனத் தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``அனைத்துக் காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பிக்க வேண்டும். இவற்றின் அட்மினாக இன்ஸ்பெக்டர்கள் அல்லது சப் - இன்ஸ்பெக்டர்கள் இருக்கலாம். இந்த குரூப்பில் காவலர்கள் செய்யும் வேலைகளில் சிறப்பானவற்றைப் பாராட்டி புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் பகிரலாம்.

டி.ஜி.பி ஆர்டர் 

வரும் 18-ம் தேதிக்குள் வாட்ஸ் அப் குழுக்களின் பெயர்கள், அதற்கு யார் அட்மின், அவரது பெயர், அவரது பதவி, குரூப்பில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், எப்போது ஆரம்பித்தது என்பது குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பில் செல்போன் பயன்பாட்டை போலீஸார் அதிகம் பயன்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க