அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்தவருக்கு நடந்த சோகம்! | Old man dies while watching Alanganallur Jallikkattu

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (17/01/2019)

கடைசி தொடர்பு:10:42 (17/01/2019)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்தவருக்கு நடந்த சோகம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண வந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். 

ஜல்லிக்கட்டைக் காண வந்த முதியவர் உயிரிழப்பு

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் 1,400 காளைகளும் 848 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் எனச் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகிறார்கள். இதில் சிறந்த காளை, மாடுபிடி வீரர் ஆகியோருக்கு அ.தி.மு.க சார்பில் சொகுசுக் கார்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

இந்தநிலையில், மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த அலங்காநல்லூரைச் சேர்ந்த பெரிய காங்கேயனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை மதுரைக்கு அனுப்பி வைப்பதற்காக 108 ஆம்புலன்ஸில் ஏற்ற மருத்துவக் குழு முற்பட்டது. அப்போது, பெரிய காங்கேயனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.