எனக்கு மகிழ்ச்சியளித்த 2 காட்சிகள்! - விஸ்வாசம் படக் குழுவைப் பாராட்டிய காவல் துணை ஆணையர் | Chennai police officer about viswasam

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (17/01/2019)

கடைசி தொடர்பு:12:17 (17/01/2019)

எனக்கு மகிழ்ச்சியளித்த 2 காட்சிகள்! - விஸ்வாசம் படக் குழுவைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்

விஸ்வாசம் படத்தில் சில காட்சிகள் தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் காவல் துணை ஆணையர் சரவணன் தன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அவரின் பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாசம்
 

அஜித் -சிவா கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் எனப் பலர் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். விஸ்வாசம் டீஸர், டிரெய்லர் வெளியான போதே அஜித்தின் கெட் அப், ஒரு காட்சியில் ஹெல்மெட் போட்டு இரு சாக்கர வாகனம் ஓட்டியது என ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் சில காட்சிகள் சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளார்.

விஸ்வாசம் 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக (தலைமையிடம்) துணை கமிஷனர் சரவணன் விஸ்வாசம் படம் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு பின்வருமாறு, 

``சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்குச் சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .


*படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. 

*தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது. 

*இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள்” என்று குறிப்பிட்டு சரவணன் பாராட்டியுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க