சபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்! - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | Sabarimala Tradition should be Protected says sri sri ravi shankar

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:19:07 (17/01/2019)

சபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்! - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

`சபரிமலை  ஐயப்பன் கோயில் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்' என வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். இவர், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, கோயில் ஜீயரை சந்தித்தார். சுவாமி தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில்  ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற பெண்கள் யாரும் பக்தர்கள் அல்ல. சபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும். மத்திய அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இன்னும் நிறைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.