களைகட்டிய காணும் பொங்கல் - காஞ்சிபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! | Heavy crowd in kanchipuram beacuse of kaanum pongal celebration

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (17/01/2019)

களைகட்டிய காணும் பொங்கல் - காஞ்சிபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

காணும் பொங்கலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில், காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள  கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதுபோல, சுற்றுலாத் தலங்களிலும் வழக்கம்போல மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

காணும் பொங்கல் வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், காணும் பொங்கல் தினத்தில் கூட்டம் அதிக அளவில் வரும் என முன்பே கணித்து, அதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது. சுமார் 35,000-க்குக்கு மேற்பட்ட பார்வையாளர்கள், இன்று பூங்காவிற்கு வந்திருந்தார்கள். கூட்டம் அதிக அளவில் இருந்த காரணத்தால், மீன் தொட்டி இருக்கும் பகுதியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. சைக்கிள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பூங்காவினுள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

மாமல்லபுரம் காணும் பொங்கல்

மாமல்லபுரத்திலும் சுற்றுலாப்பயணிகளின் கொண்டாட்டத்திற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.

மாமல்லபுரம்

மணலில் செல்லும் நான்கு சக்கர வாகனம் மூலமாகவும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் குளிக்க காவல்துறை தடை விதித்திருந்தாலும், அதையும் மீறி இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்தனர். சிலர் ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் வந்திருந்தார்கள். ஆனால், சரணாலயத்தில் 1000 பறவைகள் கூட இல்லை. ஏரிக்கரையின் கடைசிவரை நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சிலர், காட்சிக் கூடத்தில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்த விளக்கத்துடன்கூடிய பறவைகளின் படங்களைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க