ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது! | Female child delivered HIV patient in sattur

வெளியிடப்பட்ட நேரம்: 22:39 (17/01/2019)

கடைசி தொடர்பு:22:39 (17/01/2019)

ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹெச்.ஐ.வி

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், மருத்துவ சோதனை செய்ய கடந்த மாதம் சாத்தூர் மருத்துவமனை சென்றபோது, சத்துக்குறைவுக்காக  ரத்தம் ஏற்றினார்கள். அதற்குப் பின், அவருக்கு  திடீரென்று உடல் நலம் குன்றியது. மீண்டும் அவரை மருத்துவமனையில் சோதித்தபோது, அவர் உடலில் ஏற்றப்பட்ட ரத்தம் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ரத்தம் உள்ள ஒருவரிடம் தானம் பெற்ற ரத்தத்தை சோதனை செய்யாமல் வைத்திருந்து, அதையே அந்த கர்ப்பிணிக்கு ஏற்றிய விவகாரம் வெளியே கிளம்பி, தமிழகமே பரபரத்தது.

அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, இந்த ரத்தம் செலுத்த காரணமான அந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா, உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டது. குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லாமல் பிரசவிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அப்பெண்னுக்கு இன்று மாலை 7 மணியளவில் பெண் குழந்தை ஆரோக்கியமாக  பிறந்துள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க