உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி! | balakrishna reddy appeal in supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 07:04 (18/01/2019)

கடைசி தொடர்பு:09:40 (18/01/2019)

உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி!

போலீஸ் ஜீப் எரிப்பு வழக்கில் 3 வருடச் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்துள்ளார்.

பாலகிருஷ்ணா ரெட்டி

1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக போலீஸுக்கு எதிராக ஜீமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடக எல்லையில் உள்ள பாகலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை சென்னைச் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில்வழங்கியது.

பாலகிருஷ்ணா ரெட்டி

அதில், பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 வருடம் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சிறைத்தண்டனையை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ணா ரெட்டி. கூடவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க