செல்போன் சுவிட்ச் ஆஃப்?! - மனோஜ், சயான் விவகாரத்தில் பதறிய மேத்யூ #Kodanadu | Mathew restless over Sayan, Manoj Kodanadu controversy

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (18/01/2019)

கடைசி தொடர்பு:12:06 (18/01/2019)

செல்போன் சுவிட்ச் ஆஃப்?! - மனோஜ், சயான் விவகாரத்தில் பதறிய மேத்யூ #Kodanadu

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மனோஜ், சயான்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்தபோது காவல்துறை கடத்தியதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி மீது இவர்கள் இருவரும் குற்றசாட்டுகளை அடுக்கிய நிலையில் தமிழக போலீஸார் டெல்லியில் வைத்து சயான் மற்றம் மனோஜை கைது செய்து சென்னை கொண்டுவந்தனர். அவர்களை சிறைக்கு அனுப்பமுடியாது எனக் கூறிய எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, வரும் 18-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். இன்று காலை கேரளாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த இருவரையும் மேத்யூ தொடர்பு கொண்டபோது இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பதறிய மேத்யூ நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கடத்திவிட்டதாகத் தகவல் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜராவார்களா, மாட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் என்ட்ரி கொடுத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக  சயான் முகம் சவரம் செய்து டிப்டாப்பாக ஆஜராகியுள்ளார். மேலும், இருவரையும்  யாரும் கடத்தவில்லை என்று இருவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.