விளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு | Village People Protest Against NLC expansion

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (18/01/2019)

விளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு

என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி

நெய்வேலி என்எல்சி நிறுவனம் முதல் சுரங்கம், இரண்டாவது சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம் என 3 சுரங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி செய்துகொண்டிக்கிறது. இந்நிலையில், ஏற்கெனவே செயல்பட்டுவரும் முதல் சுரங்க விரிவாக்கத்துக்கு அருகில் உள்ள தென்குத்து கிராமத்தில், 191 ஹெக்டேர் விளை நிலங்களைக் கையப்படுத்திவருகிறது. இதனால், சுமார் 1500 குடும்பங்களைச் சேர்ந்த            6 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. என்எல்சி நிறுவனம், வெறும் 20 மில்லியன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க 191 ஹெக்டேர் விளை நிலங்களை எடுக்கிறது, இது தேவையில்லாதது. மேலும், இப்பகுதி நிலங்களை விவசாயிகள் தங்கள் தேவைக்கு விற்கவோ மற்றும் அடமானம் வைக்கவோ முடியாமல் முடக்கம் செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்ணாவிரதம்

இத்திட்டத்தைக் கைவிடக்கோரி, இந்தக் கிராம மக்கள் பல கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்நிலையில், தென்குத்து கிராம மக்கள், இன்று ஒரு நாள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, கம்மாபுரம் பகுதியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க 26 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில், நடந்துகொண்டிருக்கும் விரிவாக்கப் பணிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.