ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்! | new building opened for poonamallee corporation

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:05 (19/01/2019)

ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்!

சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகத்தை மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றித் திறந்து வைத்து, அலுவலகத்தைப் பார்வையிட்டார்.

பூந்தமல்லி நகராட்சி

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகக் கட்டடம் புதிதாகக் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த நிலையில் இந்தப் புதிய கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் ரூ.12.68 கோடி மதிப்புள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், கருவூலம் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பனிகளின் திறப்பு விழா நேற்று பூந்தமல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். 

நகராட்சி

இவ்விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், க.பாண்டியராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பலராமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர், புதிய நகராட்சியைப் பொதுமக்கள் பார்வையிட்டனர். பூந்தமல்லி குமணன் சாவடி அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து அ.தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.