தொழில் முதலீட்டாளர் மாநாட்டை முதலில் நடத்தியது அ.தி.மு.க அரசுதான் - அமைச்சர் கடம்பூர் ராஜு | The first Investors Conference was held only by the AIADMK government says Minister Kadambur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (19/01/2019)

கடைசி தொடர்பு:17:34 (19/01/2019)

தொழில் முதலீட்டாளர் மாநாட்டை முதலில் நடத்தியது அ.தி.மு.க அரசுதான் - அமைச்சர் கடம்பூர் ராஜு

”தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்களா? முதலில் நடத்திக் காட்டியது அ.தி.மு.க அரசுதான். ”என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

”தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்களா? முதலில் நடத்திக் காட்டியது அ.தி.மு.க அரசுதான்” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

நெல்லையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு முதல்வர் சில நிமிடங்கள் பேசுகிறார்.  இதற்கான முன் ஏற்பாடுகள்குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்க உள்ளார். முந்தைய எந்த அரசும் செய்யாத வகையில், மகளிருக்கு சுழற்சி முறையில் கடன் தொகைகளை அதிகப்படுத்தியது அ.தி.மு.க அரசுதான்.

மகளிருக்கு பொற்காலம் என்றால், அது ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம்தான். அ.தி.மு.க., ஆட்சியில்தான் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  தி.மு.க-வினர் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை. பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அதே ஆதரவு இந்த அரசுக்கும் உள்ளது. ஜெயலிதாவின் ஆளுமைத்திறனை அவரது ஆன்மா இந்த அரசுக்கு அளித்துக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க-வில் யாரும் தனியாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மாட்டார்கள். பேசுகின்ற நேரத்தில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சில கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஆனால், இறுதி முடிவை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சித்தலைமை அறிவிக்கும். ஜெயலலிதா இருக்கும்போது என்ன நிலையில் கூட்டணி முடிவெடுத்தாரோ, அதேபோல, தேர்தல் அறிவிக்கும்போது கட்சித்தலைமை தகுந்த முடிவை எடுக்கும்.

இந்த ஆட்சியின் சாதனைகளைப் பொறுக்க முடியாத கனிமொழி போன்றவர்கள் விமர்சனம் செய்துவருகிறார்கள். தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது, தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்களா? முதலில் நடத்திக்காட்டியது அ.தி.மு.க அரசுதான். வரும் 23, 24-ம் தேதி, சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாநாட்டின் இலக்கு ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாகக் கிடைத்துள்ளது.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க