ஓட்டப்பந்தயத்தில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி - காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு! | Madras Hc oder to tnurb recruit pregnant woman

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (19/01/2019)

ஓட்டப்பந்தயத்தில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி - காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு!

காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில், ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக  வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்

தமிழகத்தில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு, கடந்த 2018 அக்டோபர் மாதம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கர்ப்பிணிப்பெண் தேவிகா, ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்ததாகக் கூறி, அடுத்தகட்ட தேர்வுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து தேவிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி விமலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ` 8 வார கருவுற்றிருந்த காரணத்தால், ஓட்டப்பந்தயத்தில் தாமதமாக வந்தார். அவருக்கு காவலர்   பணி வழங்கி, பிரசவத்துக்குப் பின்,  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கர்ப்பிணிப்பெண்

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, `பெண் போலீஸாருக்குப் பதவி உயர்வு தேர்வு தொடர்பாக, கடந்த 2003-ம் ஆண்டு, போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், கர்ப்பிணிப் பெண் போலீஸார், தன்னுடைய மருத்துவச் சான்றிதழை தாக்கல்செய்து, பிரசவத்துக்குப் பின்னர் அவர்களுக்குத் தனியாக உடல் தகுதித் தேர்வு நடத்தப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். பின்,  மனுதாரரை இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுசெய்ய உத்தரவிட்டார். மேலும், பிரசவத்துக்குப் பின், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை அவருக்குத் தனியாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.