விபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன? - விவரிக்கும் சயான் மாமனார்!#Video | Sayan's father in spoke about Kodanad Estate case

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (19/01/2019)

கடைசி தொடர்பு:19:32 (19/01/2019)

விபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன? - விவரிக்கும் சயான் மாமனார்!#Video

சயான் தவறு செய்தான். அதனால், அவன் தண்டனை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எங்களது மகளும் பேத்தியும் என்ன தவறு செய்தார்கள்?

கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சயானின் வாக்குமூலம், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, தேசிய அளவில் பேசும் பொருளாகியுள்ளது. 

வினுப்பிரியா தந்தை

குறிப்பாக, இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான கனகராஜ், சயான் ஆகியோருக்கு, அடுத்தடுத்து ஒரே மாதிரி சாலை விபத்து நடந்தது. சேலம் அருகே நடந்த விபத்தில் கனகராஜ் உயிரிழந்துவிட, பாலக்காடு அருகே நடந்த விபத்தில் சயானின் மனைவி வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்து ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சயான் உயிர்தப்பிவிட்டார். கோவையில் உள்ள சயானின் மனைவி வினுப்பிரியாவின் தந்தை வீட்டுக்குச் சென்றோம்.

 

"வினுப்பிரியா ஆசைப்பட்டதால், சயானைத் திருமணம் செய்துவைத்தோம். எங்கள் வீட்டில் இருந்துதான் குடும்பம் நடத்திவந்தனர். அப்போதெல்லாம் சயானின் நடவடிக்கையில் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்புதான், கனகராஜ் உடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகுதான், சயானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சயான் தவறு செய்தான். அதனால், அவன் தண்டனை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எங்களது மகளும், பேத்தியும் என்ன தவறு செய்தார்கள்?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார் வினுப்பிரியாவின் தந்தை சிவசங்கரன்.

இதுதொடர்பாக, "என் மகளும், பேத்தியும் செய்த பாவம் என்ன?" என்ற தலைப்பில், இன்று வெளியாகியுள்ள ஜூனியர் விகடன் இதழில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளோம். மேலும், வினுப்பிரியா தந்தையின் பேட்டியை வீடியோவாகவும் காணலாம்.