‘கோபுர கலசம் விழுந்ததாக கிளம்பியது வெறும் வதந்தி’ - திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம் | The Thiruchendur temple tower was fallen is the false news says temple management

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (20/01/2019)

கடைசி தொடர்பு:10:45 (20/01/2019)

‘கோபுர கலசம் விழுந்ததாக கிளம்பியது வெறும் வதந்தி’ - திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

திருச்செந்தூர் கோயிலில் கோபுர கலசம் கீழே விழுந்ததாக வாட்ஸ் அப்களில் பரவி வருவது உண்மையல்ல. அது முற்றிலும் வதந்தி என திருக்கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடற்கரை அருகில் உள்ள தலமான இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திருவிழாக்களில் ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆகியவை முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினந்தோறும் இங்கு நூற்றுக்காண பக்தர்களும், விடுமுறை நாட்கள் மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான மக்களும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த இரண்டுநாட்களாக,  ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜ கோபுரத்தில் இருந்து ஒரு கலசம் கீழே விழுந்துவிட்டதாகவும், ஊரே இரவில் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும்’ என ஒரு தகவல் பரவியது. அடுத்த சில மணி நேரங்களில்,  ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடிமரம் சரிந்து விழுந்துவிட்டதாகவும், வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டி வழிபட வேண்டும்’ எனவும் செய்தி பரவியது. 

திருச்செந்தூர்

வதந்திகளை நம்பி சில மக்கள் தங்களில் வீடுகளில் வாசல் தெளித்து, விளக்கும் ஏற்றினர். திருச்செந்தூரில் உள்ள மக்கள் கோயில் முன்பு திரண்டனர். நாளை தைப்பூசம் என்பதால் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கும் இந்த தகவல் போகவே மிகுந்த குழப்பத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் ”கோபுர கலசம் விழுந்துவிட்டதாகவும், கொடிமரம் சரிந்துவிட்டதாகவும் வாட்ஸ் அப்களில் வைரலாகப் பரப்பட்டு வரும் தகவல் ஏதுவும் உண்மை அல்ல. அது முழுமையான வதந்தி. பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை” என திருக்கோயில் நிர்வாகத்தரப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இந்த தகவல் வைரலாகப் பரவியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க