‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்!’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம் | Road Accident near Ambur 4 young people Kills

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (20/01/2019)

‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்!’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்

ஆம்பூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய கோர விபத்தில், 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மளிகைத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அயூப். இவரது மகன் முகமது சஃபான் (22). இவர் உட்பட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர், குடியாத்தம் மேல் ஆலத்தூரில் நேற்று நடைபெற்ற இஸ்திமா என்கிற இஸ்லாமியர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, நள்ளிரவு ஊர் திரும்பினர். ஆம்பூர் அடுத்த ஐத்தம்பட்டு சின்னவரிகம் கூட்ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமுள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கார் நொறுங்கி உருக்குலைந்தது. காரில் பயணித்த முகமது சஃபான் மற்றும் முகமது இம்ரான் (19), உசேன் (20), முஸமில் (20) ஆகிய நான்கு இளைஞர்கள் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து, உமராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.