`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்! | 'Government should announce virudhachalam as a separate district' says social activists

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (21/01/2019)

`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர்கள்,
விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்தது.  கூட்டத்திற்கு  வழக்கறிஞர் தனவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன்,வழக்கறிஞர் அருள்குமார், விவசாய சங்க கார்மாங்குடி வெங்கடேசன், இந்து ஆலய மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி  மாவட்ட தலைவர் கதிர்காமன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கடலூர்

இந்த கூட்டத்தில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்தித்து மனு கொடுக்க வேண்டும். விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது. விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கோரி கையெழுத்து இயக்கம், அனைத்து ஊராட்சிகளிலும் நடைப்பெறும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தனி மாவட்டம் தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விருத்தாசலம் பாலகரையில் பொது மக்கள் சார்பில் வரும் 22ம் தேதி கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவது, தனி மாவட்ட கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலைப் புறக்கணிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.