`முதல்வராக முடியவில்லை என்ற விரக்தியில் உளறுகிறார்' - தம்பிதுரையைக் கலாய்த்த டி.டி.வி. தினகரன்! | ttv dinakaran slams admk mp thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:07:55 (21/01/2019)

`முதல்வராக முடியவில்லை என்ற விரக்தியில் உளறுகிறார்' - தம்பிதுரையைக் கலாய்த்த டி.டி.வி. தினகரன்!

'தன்னால் இன்னும் முதல்வராக முடியவில்லை என்ற விரக்தியில் தம்பிதுரை உளறிவருகிறார்' என டி.டி.வி. தினகரன் சாடியுள்ளார்.

தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்காது என்றும், அடிக்கடி பா.ஜ.க குறித்தும் காரசாரமான  கருத்துகளைத்  தெரிவித்துவருகிறார். சமீபத்தில்கூட `தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற அ.தி.மு.க-வுடன் கூட்டணி அவசியம்" என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த தம்பிதுரை, ``பா.ஜ.க-வை காலூன்றவைக்க நாங்கள் தோளில் சுமந்து செல்ல மாட்டோம். நாங்கள் உழைக்கிறோம் நிலைத்திருக்கிறோம். பா.ஜ.க-வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க-வை சுமந்து செல்ல அ.தி.மு.க-வினர் பாவம் செய்திருக்கிறார்களா?. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகுறித்து சூழலுக்கு ஏற்ப கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுக்கும்" என்று கூறினார். இவரின் பேச்சு, இரு கட்சி வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தினகரன்

இந்நிலையில், தம்பிதுரையின் பா.ஜ.க எதிர்ப்பு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வேண்டும், முதல்வராக வேண்டும் என தம்பிதுரைக்கு ஆசை இருந்தது. ஆனால், முதலில் பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி முதல்வரானார். அப்போதும் ஏமாற்றம் அடைந்தார். இனியும் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்ற விரக்தியில் இவ்வாறு உளறிவருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது பா.ஜ.க-வை விமர்சித்துப்பேசுகிறார். ஆனால் டெல்லி செல்லும்போது பா.ஜ.க அமைச்சர்களுடன், எம்பிக்களுடன் இணக்கமாக இருந்து நாடகம் ஆடுகிறார்" என குற்றம் சாட்டியுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க