``இனி மக்கள்தான் எனக்கு ஆதரவு;மகன் விடுதலைக்காக பயணம் போகப்போறேன்!" - அற்புதம்மாள் | arputhammal's new step in perarivalan release issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:33 (22/01/2019)

``இனி மக்கள்தான் எனக்கு ஆதரவு;மகன் விடுதலைக்காக பயணம் போகப்போறேன்!" - அற்புதம்மாள்

அற்புதம்மாள்

றைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள தன் மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக, அற்புதம்மாள் 28 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இந்நிலையில், 7 பேர் விடுதலைக்காக  சுற்றுப்பயணம்  மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் அற்புதம்மாளிடம் பேசினோம்.

``என் புள்ளை உட்பட 7 பேரையும் விடுதலைசெய்யச் சொல்லி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து நாலு மாதத்துக்கு மேலாகிடுச்சு. இதுவரை 7 பேர் விடுதலைக்கான எந்த அறிகுறியும் தெரியலை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுக்கணும்னு நான் தொடர்ந்து போராடிகிட்டுதான் இருக்கேன். ஆனால், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படலை. இந்தப் பொங்கல் பண்டிகைக்கு என் புள்ளை வீட்டுக்கு வந்திடுவான்னு நினைச்சேன். ஆனா, என் ஆசை நிறைவேறலை. ரொம்ப வேதனையில இருக்கேன்.

அற்புதம்மாள்

இனி, 7 பேர் விடுதலை விஷயத்துல மக்கள்தான் எனக்கு ஆதரவு. எனவே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி, வரும் 24-ம் தேதி கோயம்புத்தூரில் பயணத்தைத் தொடங்குகிறேன். ஈரோடு, சேலம் உட்பட வரிசையாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போகப்போறேன். இறுதியாக, சென்னையில நடைப்பயணத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கேன். அப்போ, பல தலைவர்களையும் அழைப்பேன். இந்தச்  சுற்றுப்பயணத்தில்  என் ஆதங்கத்தை மக்களிடம் வெளிப்படுத்துவேன். மக்களின் கருத்துகளைக் கேட்பேன். அதில், ஆக்கபூர்வமான கருத்துகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போறேன்" என்கிறார் அற்புதம்மாள்.