``அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' - லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கம்! | "Permission has been misused" - Loyola College Administration Explained!

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (21/01/2019)

கடைசி தொடர்பு:15:13 (21/01/2019)

``அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' - லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கம்!

``சமூக அமைதியைச் சீர்குலைக்கும் எந்தச் செயலுக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை'' என லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த வீதி விருது விழாவில் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டதாகக் கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் புகார் மனு கொடுத்தது.

லயோலா  அறிக்கை

இந்நிலையில், இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் மன்னிப்பு கோரிய லயோலா கல்லூரி நிர்வாகம். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் கொடுத்த அறிக்கையில், ``எந்த மதத்தையும் விமர்சிக்கும் நோக்கில் செய்யவில்லை. வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது . சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான எந்தச் செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை எங்களின் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் நீக்கப்பட்டது. இது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளது.