`முதலீட்டு மந்திரங்கள்’ - விருதுநகரில் நடக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம்! | mutual fund awareness program at viruthunagar

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (22/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (22/01/2019)

`முதலீட்டு மந்திரங்கள்’ - விருதுநகரில் நடக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எந்த அளவுகோலில் தேர்ந்தெடுப்பது, தெளிவான மியூச்சுவல் ஃபண்ட் ப்ரொஃபைலை எப்படி உருவாக்குவது, எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தொடர்வது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் களமே, விருதுநகரில் நடைபெறவுள்ள `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!'  என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாகும்.  

தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு பெருகியுள்ளது. ஆனால், எந்த ஃபண்டில் முதலீடு செய்வது, எவ்வாறு முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது போன்ற முதலீட்டு சூட்சுமங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. நமக்கான திட்டம் எதுவென்று அறிந்து சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. 

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எந்த அளவுகோலில் தேர்ந்தெடுப்பது, தெளிவான மியூச்சுவல் ஃபண்ட் ப்ரொஃபைலை எப்படி உருவாக்குவது, எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தொடர்வது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் களமே, விருதுநகரில் நடைபெறவுள்ள `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!'  என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாகும்.  

நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, வரும் 26.01.2019-ம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, விருதுநகரிலுள்ள ஸ்ரீராம் ஜேபி ரெசிடென்சியில் நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.