சுட்டி விகடனின் `திருநெல்வேலி 200’ வெற்றி விழா- மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு | chutti vikatan function held in tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (23/01/2019)

சுட்டி விகடனின் `திருநெல்வேலி 200’ வெற்றி விழா- மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

நெல்லையில் சுட்டி விகடன் சார்பாக நடைபெற்ற `திருநெல்வேலி 200’ பரிசளிப்பு விழாவில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.   

சுட்டி விகடன் தேர்வு

சுட்டி விகடன் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து, `திருநெல்வேலி 200’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியது. இதில், சுட்டி விகடன் சார்பாக வெளிவந்த இணைப்பிதழில் வெளியான நெல்லை மாவட்டம் குறித்த 200 முக்கியத் தகவல்களைத் தொகுத்து இணைப்புப் புத்தகமாக வழங்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற தகவல்களில் இருந்து 76 கேள்விகள் கேட்கப்பட்டுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் நெல்லை மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த 10,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பான வகையில் தேர்வு எழுதிய வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இன்று அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. 

பாளையங்கோட்டை ஃபிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் விழாவில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் கபில்குமார் சரட்கர் கலந்துகொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றுவதுடன், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார். அத்துடன், நெல்லை மாநகர நகராட்சி ஆணையர் நாராயணன் நாயர், ஸ்காட் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் கிளீட்டஸ் பாபு, எழுத்தாளர் நாறும்பூநாதன், சுபாஷிணி வெங்கட், மயோபதி மருத்துவமனை மருத்துவர் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 

தேர்வு

பரிசுபெற்ற மாணவர்களுக்கு ’சோலைவனம்’ பண்ணையின் சார்பாக பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் சுட்டி விகடன் மாணவர்களுக்குத் தங்களது மாவட்ட தகவலை தொகுத்து தேர்வு நடத்தியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மாவட்டத்தின் தகவல்களை அறிந்துகொள்ளவும், நீட் தேர்வு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு கலந்துகொள்ளவும் உதவிகரமாக அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.