80 வயது பாட்டியிடம் பாலியல் பலாத்காரம்!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவருக்கு 80 வயது. இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். செல்லம்மாளுக்கு நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி எல்லோரும் மனைவி, குழந்தைகளோடு வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செல்லம்மாள் மட்டும் தனிமையில் கோபாலபுரத்தில் வசித்து வந்தார். அங்கு சைக்கிளில் காய்கறி விற்பனை செய்யும் பழனிவேலுக்கு 80 வயதான செல்லம்மாள் பாட்டி மீது ஒரு பார்வை இருந்துள்ளது.

இன்று மதியம் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்லம்மாள் பாட்டியின் வீட்டுக்குள் புகுந்த பழனிவேல், செல்லம்மாள் பாட்டியின் வாயில் துணியை தினித்து கை, கால்களை கட்டிப்போட்டு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சென்றுள்ளார்.


செல்லம்மாள் பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்லம்மாள் பாட்டியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்தூர் மல்லியகரை காவல்துறையினர் பழனிவேலை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

-வீ.கே.ரமேஷ்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!