8,000 ரூபாய் கடனுக்கு கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பங்கள்! - களமிறங்கிய வருவாய்த்துறை | bonded laborers rescued in Uthiramerur

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (23/01/2019)

8,000 ரூபாய் கடனுக்கு கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பங்கள்! - களமிறங்கிய வருவாய்த்துறை

த்தரமேரூர் அருகே தனியார் அரிசி ஆலையில் கொத்தடிமைகள் போல் இருந்த ஐந்து சிறுவர்கள் உட்பட 9 பேர் காஞ்சிபுரம் மாவட்ட சார் ஆட்சியரால் அதிரடியாக மீட்கப்பட்டனர்.

உத்தரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ளது மானாம்பதி. இப்பகுதியைச் சேர்ந்த வாசு மற்றும் விஜி ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உத்தரமேரூர் அடுத்த புதுச்சேரி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரூ.8,000 கடனாகப் பெற்றுக்கொண்டு வேலை பார்த்து வந்தனர். அந்தக் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றை மட்டும் வழங்கிய ஆலை நிர்வாகம், உரிய கூலியைக் கொடுக்கவில்லை. `எங்களுக்கு உரிய சம்பளம் வேண்டும்' என அந்த ரைஸ்மில் உரிமையாளரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைக்கு அந்த ஆலை உரிமையாளர் செவிசாய்க்கவில்லை. 

 

அரிசிஆலை

இந்த நிலையில், கொத்தடிமைகளை மீட்கும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் அகிலா தேவி அந்தத் தனியார் அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தங்கி வேலை செய்து வந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, சொந்த ஊரான மானாம்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுதொடர்பாக, அரிசி ஆலை உரிமையாளரிடம் வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க