‘18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ?’- தேர்தல் ஆணையம் பதில் | election commission about tamilnadu by election

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (23/01/2019)

கடைசி தொடர்பு:12:51 (23/01/2019)

‘18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ?’- தேர்தல் ஆணையம் பதில்

குதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் காலியாக உள்ளதால், அந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் எப்போது நடைபெறும் என திருமங்கலத்தைச் சார்ந்த வேதா என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எப்போது தேர்தல் நடைபெறும் என தேர்தலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுத்யின் முன்னாள் எம்.எல்.ஏக்கள்

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், ``தமிழக சட்டமன்றத்திலிருந்து சபாநாயகரால் 18 எம்.எல்.ஏ-க்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதிலிருந்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வரும் ஏப்ரல் 24-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் மேல்முறையீடு செய்யவும்  அவகாசம் உள்ளது.

கடந்த ஜனவரி 8-ம் தேதி தலைமைச் செயலாளரிடம் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு வந்த கடிதத்தில் கஜா புயலால் பாதிப்புக்கு நிவாரணங்கள் முழுமையாகச் சென்று சேராத நிலையில் இடைத்தேர்தலை வரும் லோக் சபா தேர்தலோடு சேர்த்து நடத்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தது” இந்த விளக்கங்களை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.