`மதுரை அழகர் மலையில் சூழலியல் கொண்டாட்டம்!'- ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு | School Students Participate ecology tour in azhagarmalai

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (23/01/2019)

கடைசி தொடர்பு:15:10 (23/01/2019)

`மதுரை அழகர் மலையில் சூழலியல் கொண்டாட்டம்!'- ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருமங்கலம் பசுமை நிதியம் அமைப்பு மற்றும் திண்டுக்கல் வனத்துறை இணைந்து 50 மாணவர்களுடன் மதுரை, அழகர் மலையில் ஒரு நாள் சூழலியல் திருவிழாவை நடத்தியது. அதில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த தேசியப் பசுமைப் படை மாணவர்கள் பங்கேற்றனர். 

அழகர் மலை சூழலியல் திருவிழா

 

திண்டுக்கல் மாவட்ட வனச்சரகர், வனத்துறையின் வனவர், வனக் காப்பாளர்கள் மலையின் அடிவாரத்திலிருந்து மாணவர்களுடன் இணைந்து நிகழ்வின் இறுதிவரை வழிகாட்டினர். வனத்துறையினர், அழகர்மலையின் அமைப்பு, உயிர்களின் நிலை, ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் மக்களால் உண்டாகும் சிக்கல்கள், காட்டு மாடுகள் பற்றிய தகவல்கள், மூலிகைப் பண்ணை பற்றிய விளக்கம் எனப் பல விஷயங்களை மாணவர்களுக்கு அளித்தனர். பின்னர் பறவைகளைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொடுக்கப்பட்டது. இயற்கையை அழிப்பதால் உண்டாகும் சிக்கல்கள் குறித்த நீண்ட அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 

ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் சூழலியல் திருவிழாவில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு நேரடியான களப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. விழாவின் நிறைவில் பள்ளி மாணவ, மாணவியரே கலந்தாய்வு செய்து தனித் தனியாகப் பேசினர். இந்த நிகழ்வின் இறுதியில் ஒவ்வொரு பள்ளியின் நூலகத்துக்குத் தும்பி இதழ் வழங்கப்பட்டது.