`தம்பிதுரையும் எடப்பாடி பழனிசாமியும் நாடகமாடுகிறார்கள்!’ - தினகரன் காட்டம் | Thambidurai and edapadi palanisamy acting for something says TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (23/01/2019)

`தம்பிதுரையும் எடப்பாடி பழனிசாமியும் நாடகமாடுகிறார்கள்!’ - தினகரன் காட்டம்

ஏதோ ஒரு காரணத்துக்காகதான், தம்பிதுரையும் எடப்பாடியும் இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள் என சந்தேகம் கிளப்புகிறார் டி.டி.வி.தினகரன்.

 

.டிடிவி தினகரன்

முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் குடும்ப திருமண விழாவுக்காக திருச்சி வந்திருந்த அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திருச்சி சுப்ரமணியபுரத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, அப்பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், ``அ.தி.மு.க வுடன் மீண்டும் நாங்கள் இணையமாட்டோம். துரோகிகளிடமிருந்து விலகி வந்துவிட்டோம். அவர்களிடம் மீண்டும் சேர வாய்ப்பில்லை, அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகள் பா.ஜ.க.,வுடன் சேரவேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவருடைய ஆசையைக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்கிற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின்  கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினார்கள். ஆனால், தமிழ் நாட்டுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்துவது எவ்வாறு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை மோடி நிறைவேற்றுகிறார் எனக் கூற முடியும் என்றவர்,

பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருவது நாடகம், எடப்பாடி பழனிசாமி கூறியே அவர் அவ்வாறு பேசி வருகிறார். அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகதான் இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க-வுடன் அ.ம.மு.க சேருவதற்கு வாய்ப்பே கிடையாது” என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க