`தமிழ்ச் சொந்தங்களில் நானும் ஒருவனாக இணைகிறேன்' - அற்புதம்மாள் முயற்சியில் பங்கெடுக்கும் ஜி.வி | g.v.prakash will joined in arputham ammal protest

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (23/01/2019)

கடைசி தொடர்பு:17:57 (23/01/2019)

`தமிழ்ச் சொந்தங்களில் நானும் ஒருவனாக இணைகிறேன்' - அற்புதம்மாள் முயற்சியில் பங்கெடுக்கும் ஜி.வி

பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி, அவரது தாயார் அற்புதம்மாள் மேற்கொள்ளும் பயணத்துக்கு, திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். 

அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் எனப் பலரும் குரல்கொடுத்துவரும் நிலையில், பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார்.

பேரறிவாளன்

அதற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் அவர், நீதி கேட்கும் அறப் பயணம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார். வரும் ஜனவரி 24 (வியாழன்) கோவையில் தொடங்கி தமிழகம், புதுச்சேரி எனத் தன்னுடைய மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து பயணிக்க இருக்கிறார். இதற்காக, தமிழக மக்களின் ஆதரவைக் கோரியுள்ள அவருக்கு, பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். 

ஜி வி பிரகாஷ் குமார்

அந்த வகையில், திரைப்பட இசையமைப்பாளரும்  நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், அற்புதம்மாளின் பயணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவரின் பயணத்திலும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எழுவர் விடுதலை கோரிக்கையை முன்வைத்து நடைப்பயணம் மேற்கொள்ளும் பேரன்புத் தாய், அற்புதம்மாளின் முயற்சி வெற்றியடைய வாழ்த்தி வழியெங்கும் துணைநிற்கும் தமிழ்ச் சொந்தங்களில் நானும் ஒருவனாக இணைகிறேன்'' என்று கூறியுள்ளார். மேலும், பல பிரபலங்கள் அற்புதம்மாளின் பயணத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க