`உங்கள் மகன் இறக்கவில்லை; மனதில் இணைந்திருக்கிறார்!’ - பாடலூர் விஜய் குடும்பத்தினரை உருகவைத்த ஸ்டாலின் | MK stalin visits padalur vijay's family

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:19:50 (23/01/2019)

`உங்கள் மகன் இறக்கவில்லை; மனதில் இணைந்திருக்கிறார்!’ - பாடலூர் விஜய் குடும்பத்தினரை உருகவைத்த ஸ்டாலின்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த பாடலூர் விஜய் உருவப்படத்தைத் திறந்து வைத்துவிட்டு அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார் ஸ்டாலின். உங்கள் மகன் இறக்கவில்லை. அவரது கருத்துகளால் ஒவ்வொரு தொண்டர்கள் மனதிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் உருக்கமாகப் பேசினார். 

                                                  
பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய். இவர் தசைச்சிதைவு நோயால் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபடியே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். கலைஞர், மு.க.ஸ்டாலின் அவர்களின் மீது ஏற்பட்ட கொள்கை பிடிப்பாலும் திராவிட பாரம்பர்யத்தை முகநூல் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றவர்.

                                              

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் எந்த உறுப்புகளும் செயல்படாத நிலையிலும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் துணிச்சலாகவும் ஆட்சியை அகற்ற வேண்டும் எனும் குறிக்கோளோடு செயல்பட்டு வந்தார். நுரையீரல் மற்றும் சுவாச பிரச்னையால் அவதிப்பட்டு வந்த விஜய், கடந்த 15-ம் தேதியன்று உயிரிழந்தார். இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விஜய்யின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

                                                   

பின்பு குடும்பத்தினரிடம் பேசியதாவது, உங்கள் மகன் இறப்புச் செய்தியைக்கேட்டு அதிர்ந்துபோனேன். உங்கள் மகன் இறக்கவில்லை எங்கள் மனதில் இணைந்திருக்கிறார். உங்கள் மகன் இருந்து என்ன செய்வாரோ அதை நாங்கள் செய்வோம் என ஆறுதல் தெரிவித்துக் கிளம்பினார்.


[X] Close

[X] Close