`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை | Mathew Samuel has been banned speak about the Kodanad murder case

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (23/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (23/01/2019)

`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை

கொடநாடு கொலை தொடர்பாக முதல்வர் குறித்து பேசக்கூடாது எனப் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேத்யூ சாமுவேல்

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், இந்தக் கொலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

மாநிலத்தின் முதல்வர்மீது சுமத்தப்பட்டிருந்த இந்தக் கொலைக் குற்றச்சாட்டால் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்தக் கொலைகளுக்குக் காரணம், முதல்வர்தான் எனத் தொடர்ந்து மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டிவருகிறார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மேத்யூ பேசியுள்ளதாகவும், இதற்காக மேத்யூ ரூ.1.10 கோடி தர வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். 

மேத்யூ

மேலும், வழக்கு முடியும் வரை தன்னைப் பற்றி பேச மேத்யூ சாமுவேலுக்குத் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்தார். அவசர வழக்காகத் தொடரப்பட்டுள்ள இதன் விசாரணை நாளை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று மாலையே விசாரிக்கப்பட்டது. அப்போது, ``விவகாரம் தொடர்பாக முதல்வரைத் தொடர்புபடுத்தி மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் பேசக்கூடாது. முதல்வர் குறித்து ஆதாரமின்றி பேசவும் ஆவணங்களை வெளியிடவும் கூடாது. அதேநேரம் முதல்வர் மனு குறித்து 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்" எனக் கூறி மேத்யூ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க