`குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது!’ - தினகரனுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் | we cant allot cooker symbol for TTV Dinakaran, says election commission

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:46 (24/01/2019)

`குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது!’ - தினகரனுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம்

டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தினகரன்
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தை டி.டி.வி. தினகரன் உருவாக்கினார். அ.தி.மு.க-வில் ஒரு சாரார் அ.ம.மு.க-வில் இணைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க-வின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். 

குக்கர்
 

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,  ` அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. 

உச்சநீதிமன்றம்
 

குக்கர் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. `அ.ம.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி. எனவே குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க