''ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களால் எப்போதும் தொல்லைதான்!' - குமுறும் பால் முகவர்கள் சங்கம் | ban milk abishekam on cutouts and banners - dairy association

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (24/01/2019)

கடைசி தொடர்பு:12:10 (24/01/2019)

''ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களால் எப்போதும் தொல்லைதான்!' - குமுறும் பால் முகவர்கள் சங்கம்

மீபத்தில், நடிகர் அஜித்தின் கட்- அவுட் மீது பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிலர் முயன்றனர். கட்-அவுட்  பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். நடிகர் சிம்பு, தான் நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியாகும்போது, தன் கட்-அவுட் மீது அண்டாவைக் கொண்டு பாலாபிஷேகம் நடத்த வேண்டுமென்று  அவரின் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தமிழ்நாடு பால் முகவர் சங்கம் நடிகர் சிம்பு மீது  சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தது. புகாரில், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியாகும்போது, பால் திருட்டு நடைபெறும். எனவே, சிம்பு மீது நடவடிக்கை எடுக்கக்  கோரிக்கை விடுத்திருந்தனர்.  போலீசார் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

போஸ்டருக்கு பாலாபிஷேகம்

பால் முகவர் சங்க அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி கூறுகையில், ''கட்- அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தக் கூடாது என்று தங்கள் ரசிகர்களுக்கு உத்தரவிட வேண்டுமென்று நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பதிவுத் தபால் அனுப்பிவைத்தோம். இவர்களிடத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் எங்களைச் சந்தித்தார். அவரின் ரசிகர்கள், ரத்ததானம் செய்வது போன்ற அறப் பணிகளில் ஈடுபடுகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஹெல்மெட் அணிய வலியுறுத்துவது, சினிமா வெளியாகும் நாளில் மரக்கன்றுகள் அளிப்பது போன்ற விழிப்புஉணர்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படம் வெளியாகும் நாள்களில், அவரின் ரசிகர்கள்  எங்களுக்கு எப்போதுமே தொல்லையாகவே இருந்துவருகின்றனர் '' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்

நடிகர் சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1-ந் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க