"தேர்தல் ஆணையம் பா.ஜ.க - வுக்கு எல்லை மீறி சப்போர்ட் செய்கிறது!" − தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு | Indian Election Commission supports BJP, says Thanga tamil selvan

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (24/01/2019)

"தேர்தல் ஆணையம் பா.ஜ.க - வுக்கு எல்லை மீறி சப்போர்ட் செய்கிறது!" − தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு

 

தங்க தமிழ்செல்வன்

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இன்று பதிலளித்திருக்கிறது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அதில், குக்கர் சின்னம் பொதுவான சின்னமாக இருப்பதால், அதை அ.ம.மு.க-வுக்கு ஒதுக்க முடியாது. அ.ம.மு.க பதிவு செய்யப்படாத ஒரு கட்சி, குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது என பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக, அ.ம.மு.க கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் போனில் பேசினோம். "அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தோம். விசாரித்த நீதிமன்றம், குக்கர் சின்னத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு எதிராக, இவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். ஏன் குக்கர் சின்னத்தை அ.ம.மு.க-வுக்கு கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் கேட்டபோது, அ.தி.மு.க, இரட்டை இலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்றார்கள்.

டிடிவி தினகரன்

இதற்கிடையில், இடைத்தேர்தல் வந்ததால் குக்கர்  சின்னம் கேட்டு நாங்கள் மனுதாக்கல் செய்தோம். அதற்கு, இப்போது அ.ம.மு.க பதிவு செய்யப்படாத கட்சி என்று பதில் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு என்று ஒரு எல்லை இருக்கிறது. எல்லை மீறி பா.ஜ.க    -வுக்கு சப்போர்ட் செய்கிறது. அடுத்ததாக, நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்சியைப் பதிவுசெய்வோம். சின்னத்தை ஒதுக்கியே ஆக வேண்டும்!" என்றார்.