ப்ளஸ் ஒன் மாணவன் தொடுத்த வழக்கு; ஆசிரியர் போராட்டத்துக்குத் தடை விதித்த உயர் நீதிமன்றம்! | Court order against tamilnadu teachers association protest

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:55 (24/01/2019)

ப்ளஸ் ஒன் மாணவன் தொடுத்த வழக்கு; ஆசிரியர் போராட்டத்துக்குத் தடை விதித்த உயர் நீதிமன்றம்!

திய முரண்பாடுகளை நீக்குதல், மீண்டும் பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில். இந்தப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி,  அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற பிளஸ் 1 மாணவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம்

அந்த மனுவில், “ தமிழகத்தில் 10-வது, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. அதேபோல, மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதால். இது மாதிரியான தொடர் போராட்டங்களால் மாணவர்கள் வாழ்வுதான் பெரிதும் பாதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கில், அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ ஆசியர்கள், தாங்கள் முன்வைக்கும் போராட்டங்களை நிறைவேற்றுவதற்குப் போராட்டங்கள் ஒன்றே வழி இல்லை. ஓய்வூதிய முறையில் மாற்றமானது, கடந்த 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அவற்றில் ஏதேனும் மாற்றம் வேண்டும் எனில், உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன” என வாதிட்டார்.

ஆசிரியர் போராட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், “ மாணவர்களின் வாழ்வும் முக்கியம்தான். அதே நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் குடும்பங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும்'' என வாதிட்டார். அனைவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆசிரியர்களின் போராட்டத்திற்குத் தடைவிதித்து,  வெள்ளிக்கிழமை ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.