`இதோ இன்னொரு பகவான்!’ - கைதானாலும் கடமை தவறாத ஆசிரியர் | Teachers protest ; teacher continues his job after arrest

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (24/01/2019)

`இதோ இன்னொரு பகவான்!’ - கைதானாலும் கடமை தவறாத ஆசிரியர்

திய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் போராட்டத்தில் இறங்கியதால் மாணவ- மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், பெற்றோர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுமென்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

வைரலாகி வரும் புகைப்படம்

எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மண்டபத்தில் அடைபட்டுக் கிடந்த ஆசிரியர்களில் ஓருவர் மட்டும் மண்டபத்தின் வாசல் அருகே சேர் போட்டு உட்கார்ந்துகொண்டார். பின்னர், தன் மாணவர்களை அழைத்து பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.

இதே மண்டபத்தில் ஏராளமான ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் 'ஆயிரத்தில் ஒருவன்' போல இவரின் செயல்பாடு இருந்தது. இதைக்கண்டு பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள். தற்போது, இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது. 'போராட்டக் களத்தில் இருந்தாலும் தன் பொறுப்பையும் கடமையையும் மறக்காதவர் 'என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

தமிழகம் முழுவதுமே பகவான்கள் நிறைந்து கிடக்கின்றனர் என்பதற்கு இந்தப் புகைப்படம்  சாட்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க